மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி காயம்

மெஞ்ஞானபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி காயம்
Published on

குலசேகரன்பட்டினம்:

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வாகைவிளை நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக உடன்குடி பஜாருக்கு சென்றுள்ளார். அப்போது உடன்குடியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலையைக் கடக்க முயன்ற அவர் மீது, அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்ச பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com