தொழிலாளி தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலை
Published on

ஆயக்குடி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 25). வெல்டிங் தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் துரைச்சாமியை, அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த துரைச்சாமி, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com