அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு - உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

தொழிலாளர் நலனிலும், பாதுகாப்பிலும் எந்தவொரு சமரசத்திற்கும் அரசு இடம் கொடுக்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு - உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இதுபோன்ற துயர சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும். தொழிலாளர் நலனிலும், பாதுகாப்பிலும் எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com