

சென்னை,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) சார்பில், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த பிற பங்குதாரர்களுக்கு வேளாண் ஏற்றுமதி தொடர்பான பயிலரங்கு வருகின்ற 18.06.2026-அன்று திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சபரி மஹாலில் நடைபெற உள்ளது.
இப்பயிலரங்கில், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதியில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் அவற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அரசு வழங்கும் ஆதரவு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 9500261727 என்ற கைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயிலரங்கில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.