உலக மீனவர் தினம்: மீனவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்: வேல்முருகன்

கடல்சார் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை.
வேல்முருகன்
Published on: 

சென்னை,

உலக மீனவர் தினத்தையொட்டி, மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள், கடல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மீனவர்கள்

கடலோடு போராடி, அலைகளைக் கடந்து, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்து, நாட்டின் உணவுத் தேவையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி, இயற்கையின் சீற்றங்களையும், கடல்சார் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை.

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடலில் மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மீனவக் குடும்பங்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாழ்த்து

மீனவர்களின் உரிமை காப்போம். வாழ்வாதாரம் உறுதி செய்வோம். மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், உலக மீனவர் தின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X