உலக இதய தினம்: தினத்தந்தி-மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்தும் இணையவழி கருத்தரங்கம்.. உடனே முன்பதிவு செய்யுங்க..!

இதய ஆரோக்கியம் தொடர்பாக, சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
உலக இதய தினம்: தினத்தந்தி-மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்தும் இணையவழி கருத்தரங்கம்.. உடனே முன்பதிவு செய்யுங்க..!
Published on

இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது இதய நோய்கள். இந்த பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு தனிநபர்கள், அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான உலக இதய தினத்தை முன்னிட்டு துடிப்பை தவறவிடாதீர்கள் என்ற கருப்பொருளில் இதய ஆரோக்கியத்திற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன.

அவ்வகையில் உலக இதய தினத்தை முன்னிட்டு தினத்தந்தி மற்றும் சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை இணைந்து செப்டம்பர் 27-ம் தேதி இணையவழி கருத்தரங்கை நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் ஒவ்வொரு துடிப்பும் முக்கியம் என்ற தலைப்பில் இதய ஆரோக்கியம் தொடர்பாக, சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் டாக்டர் ராபர்ட் கோயல்ஹோ MS., M.Ch. Director & Chief Paediatric Cardiac Surgeon MIOT Centre for Childrens Cardiac Care, MIOT International, டாக்டர் ரிச்சர்டு சல்தன்ஹா MS., M.Ch., DNB Director - Adult Cardiothoracic and Vascular Surgery, MIOT International, டாக்டர் ஷியாம் குமார் G MD (General Medicine), DM (Cardiology) Senior Interventional Cardiologist,MIOT International, டாக்டர் மணிகண்டன் DNB (General Medicine), DNB (Cardiology) Senior Interventional Cardiologist,MIOT International ஆகியோர் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இதய நோய்கள் தொடர்பாக வாசகர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க உள்ளனர்.

இதயத் துடிப்பை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இக்கருத்தரங்கின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இக்கருத்தரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 27.9.2025 (சனிக்கிழமை)

கருத்தரங்கம் நடைபெறும் நேரம் : பகல் 11 மணி முதல் 12 மணி வரை.

பதிவு செய்ய கிளிக் செய்யவும்.. https://events-dailythanthi.com/world-heart-day/

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com