சாத்தனூர் திருமூலர் கோவிலில் உலக சித்தர் தின விழா

சாத்தனூர் திருமூலர் கோவிலில் உலக சித்தர் தின விழா
சாத்தனூர் திருமூலர் கோவிலில் உலக சித்தர் தின விழா
Published on

கும்பகோணம் அருகே சாத்தனூர் கிராமத்தில் திருமூல நாயனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 9-வது உலக சித்தர் தின விழா மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. கோவிலின் மூலவரான திருமூலநாயனாருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருமந்திர முற்றோதுதலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான திருமந்திரம் ஒப்புவித்தல் போட்டியும் நடந்தது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திருமூல நாயனாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், திருமந்திர யோக ஆராய்ச்சியாளர் பொன் மாணிக்கவல்லி, பட்டிமன்ற நடுவர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பாளர் மணி என்கிற சந்திரசேகரன் மற்றும் திருமூலர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com