பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டையில் புழு இருந்ததால் பரபரப்பு

தருமபுரி அருகே பள்ளி கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டையில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டையில் புழு இருந்ததால் பரபரப்பு
Published on

தருமபுரி,

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையில் புதிய அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும் தரமான முட்டைகள் வழங்க அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com