10,008 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

10,008 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
10,008 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
Published on

குனியமுத்தூர்

காவை மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10,008 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கு இந்துமுன்னணி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று குனியமுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி 1008 பெண்கள் கலந்து கொள்ளும் அம்மன் மஞ்சள் நீர் அபிஷேக ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் டி.கே. மார்க்கெட் மாரியம்மன் கோவிலில் தொடங்கி செல்வபுரம் கருப்பராயன் கோவிலில் முடிவடைகிறது.

10,008 விநாயகர் சிலைகள்

மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவது என்றும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் 10,008 விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுவது, மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, கோவை மாநகர் சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்க அழைப்பது, வருகிற 27-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் உழவாரப்பணி நடத்துவது, இதில் இந்து முன்னணியினரோடு, பொதுமக்களும், ஆன்மிக அமைப்புகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன், பொதுசெயலாளர் ஜெய்சங்கர், செய்தி தொடர்பாளர் தனபால், செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன், ஆனந்த், ரமேஷ், துணைத் தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com