பொதுமக்களுக்கு யோகா பயிற்சி

பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு யோகா பயிற்சி
Published on

கரூர் மாவட்டம், நொய்யல் அங்கன்வாடி மையத்தில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி டாக்டர் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியர், சுகாதார தன்னார்வலர் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நொய்யல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com