மாணவர்களுக்கு யோகா பயிற்சி

புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
மாணவர்களுக்கு யோகா பயிற்சி
Published on

திருவாரூரை அடுத்த புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் தசரதன் முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.. பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com