விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: நெல்லை கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: நெல்லை கலெக்டர் தகவல்
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் (Powerloom Modernisation Scheme) மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.

1. சாதாரண விசைத்தறிகளை ரேப்பியர் தறிகளாக மாற்ற 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ.1 லட்சம்),

2. புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் (அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்),

3. பொது வசதி மையம் அமைக்க 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5 லட்சம்) மானியம் வழங்கப்படுகிறது.

மேற்சொன்ன திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் திருநெல்வேலி சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி 627009 என்ற முகரியினை அணுகி தொடர்புக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com