அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் கீழ்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/annalambedkar_award_applnform_t_290824.pdf மேலும் விண்ணப்ப படிவத்தினை https:/tinyurl.com/ambedkaraward என்ற இணையதளத்திலிருந்தும் இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், சென்னை-05 அல்லது தூத்துக்குடி மாவட்ட அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com