இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமங்கலம் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 41). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி கற்பகவல்லி (38). முருகன் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கற்பகவல்லி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கற்பகவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com