இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆற்காடு அருகே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னகுக்குண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி விவசாயி. இவரது மனைவி சரண்யா (வயது 26). இவருக்கு சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com