திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அபிபா பர்கின் (வயது 23). இவருக்கு உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இக்ரம் என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது. கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த ஏப்ரல் 17-ந்தேதி கொடுங்கையூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அபிபா பர்க்கின் வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அபிபா பர்கின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடம் வந்து அவரது உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் கணவரும் அவரது குடும்பத்தாரும் உடுமலைப்பேட்டையில் உள்ளதால், அவர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரித்த பின்பு தற்கொலைக்கான உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். திருமணம் ஆகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com