ஓடும் ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

தாயும் சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஓடும் ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொ.கீரனூரை சேர்ந்தவர் மதன். அவருடைய மனைவி அழகு சுந்தரி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந் தார். நேற்று அதிகாலை அவர், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஒட்டன்சத்திரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது, அழகுசுந்தரிக்கு பிரசவ வலி அதிகமானது.

இதையடுத்து ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, உடன் வந்த மருத்துவ உதவியாளர் காயத்ரி, பிரசவ முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அழகுசுந்தரிக்கு சுக பிரசவமாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com