பூந்தமல்லியில் 7 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து பூந்தமல்லி சுற்று பகுதியில் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பூந்தமல்லியில் 7 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Published on

சென்னை, பூந்தமல்லியில் விற்பனை செய்வதற்காக 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த பட்டாபிராம், தண்டரை, வெள்ளாளர்நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லத்தீப் என்ற வாலிபரை பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அப்துல்லத்தீப் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, பூந்தமல்லி சுற்று பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com