அம்பையில் நடந்து சென்றவரை கட்டையால் தாக்கி மிரட்டல்: வாலிபர் கைது

அம்பாசமுத்திரம் ரெயில்வேகேட் அருகே ஒருவர் நடந்து சென்றபோது எதிரே வந்த வாலிபர், அவர் மீது மோதியதில் கீழே விழுந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், ரயில்வே பீட்டர் ரோடு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 30) என்பவர் 28.6.2025 அன்று அம்பாசமுத்திரம் ரெயில்வேகேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அவ்போது எதிரே வந்த அம்பாசமுத்திரம், அண்ணாநகரை சேர்ந்த வென்னிமுத்து(20) என்பவர் பேச்சிமுத்து மீது மோதியதில் அவர் கீழே விழுந்துள்ளார். அதற்கு பேச்சிமுத்து, வென்னிமுத்துவிடம் பார்த்து போக வேண்டியது தானே என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வென்னிமுத்து அவரை அவதூறாக பேசி கட்டையால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பேச்சிமுத்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வென்னிமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.






