பிரம்மதேசம் அருகேபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

பிரம்மதேசம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டா.
பிரம்மதேசம் அருகேபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
Published on

பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே உள்ள பெருமுக்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி மகன் பாலா (வயது 31). இவர் மீது பிரம்மதேசம், திண்டிவனம், ரோசணை, கிளியனூர், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, சாராய கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெருமுக்கல் பகுதியில் பாலாவை தேடினர். அப்போது, ஏரிக்கரை அருகே வந்த தென்னம்பூண்டி பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவரிடம், பாலா வழிப்பறியில் ஈடுபட்டதால் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பாலாவை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து, பிரம்மதேசம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com