குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா பழைய பஸ் நிலையம் உள்ளிக்கான்சந்து பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவருடைய மகன் தமீம்அன்சாரி (வயது25). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் அளித்த பரிந்துரையின்பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகேசன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த வழக்கை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து தமீம்அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தமீம்அன்சாரியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com