குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 29). வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிய வழக்கில் இவரை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவருக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தமிழ்செல்வனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com