நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

நாகர்கோவில், மார்ச்.14-

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில் மேலக்கலங்கடி பகுதியை சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன் (வயது 32). இவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது.

தொடர்ந்து போலீசாரின் எச்சரிக்கை மீறி அவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் நேற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com