குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

நாகர்கோவில்:

காட்டாத்துறை சரல்விளையை சேர்ந்தவர் சஜீவன்ராஜ் (வயது 24), பிரபல ரவுடி. இவர் மீது மார்த்தாண்டம் மற்றும் தக்கலை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனினும் போலீசார் எச்சரிக்கையை மீறி சஜீவன்ராஜ் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி கலெக்டர் பி.என்.ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தக்கலை போலீசார் சஜீவன்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com