தொழிலாளி கொலையில் வாலிபர் கைது

தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலையில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி கொலையில் வாலிபர் கைது
Published on

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 34). கட்டிட தொழிலாளி. கடந்த 11-ந்தேதி அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின்போது முன்விரோதம் காரணமாக இவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் கார்த்திக் ராஜா, காமாட்சி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய காமாட்சி (30) என்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயமங்கலம் போலீசார் நேற்று அங்கு சென்று பதுங்கி இருந்த காமாட்சியை கைது செய்தனர். பின்னா அவரை ஜெயமங்கலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com