போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது சம்ராஸ் (வயது 28). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது சம்ராசை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com