சி.எஸ்.கே. தோல்வி குறித்து பேசியதால் தாக்குதலா..? கைதான 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு


சி.எஸ்.கே. தோல்வி குறித்து பேசியதால் தாக்குதலா..? கைதான 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 March 2025 1:26 PM IST (Updated: 31 March 2025 5:41 AM IST)
t-max-icont-min-icon

சிகிச்சையிலிருந்த இளைஞர் மரணமடைந்ததைத் தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெருங்குடி வேளச்சேரி பகுதியைச் நண்பர்கள் ஏழு பேர் கல்லுக்குட்டை பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே ஒன்றாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே) தோல்வியடைந்ததால் பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றி குறித்து ஜீவரத்தினம் (27) என்ற இளைஞர் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மது அருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குள்ளாக மோதல் ஏற்பட்டது. இதில் ஜீவரத்தினத்தை ஐந்து நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். மீட்கப்பட்ட ஜீவரத்தினம் உடனடியாக சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஐ.பி.எல். போட்டியில் குறித்து அவரவர் ஆதரிக்கும் அணிகளை குறித்து பேசுகையில் ஏற்பட்ட விவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிந்திருந்தது. இதன்படி அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் விவகாரம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்ததால் இந்த கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. அதேபோல் உயிரிழந்த ஜீவரத்தினத்தின் மீது ஒன்பது திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

1 More update

Next Story