காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்.
காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
Published on

வெட்டிக்கொலை

காஞ்சீபுரம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தமிழ்வாணன் (வயது 24). டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் சதாவரம் பகுதியில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். சதாவரம் வேகவதி ஆற்று பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சராமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தமிழ்வாணனை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை, மகன் கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் யார் பெரியவர் என்ற போட்டியின் காரணமாக, சதாவரத்தை சேர்ந்த குணசேகரன் (21) மற்றும் அவரது தந்தை ரகு (48) ஆகியோர் சேர்ந்து தமிழ்வாணனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையொட்டி அவர்களை கைது செய்த போலீசார் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com