முன்விரோதத்தில் வாலிபருக்கு அடி-உதை: ஒருவர் கைது

திருவள்ளூரில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதத்தில் வாலிபருக்கு அடி-உதை: ஒருவர் கைது
Published on

தென்காசி மாவட்டம் கக்கஞ்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 32). திருவள்ளூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திருவள்ளூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த திருவள்ளூர் காந்திபுரம் ஜே.என்.ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (32) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகள் பேசி இரும்பு ராடை கொண்டு குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து புகழேந்தி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தார். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com