விஷம் குடித்த வாலிபர் சாவு

விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்த வாலிபர் சாவு
Published on

கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சிவராமன் (வயது 30). பட்டதாரியான இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கோவையில் இருந்து ஊருக்கு வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com