தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்
Published on

மதுரை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக விஜய் மதுரையில் இருந்து பிரசார வாகனம் மூலம் சாலை வழியாக காரைக்குடி செல்கிறார்.

இந்நிலையில், விஜய் இன்று காலை பிரசார வாகனத்தில் காரைக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். அவரின் பிரசார வாகனத்தை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பின் தொடர்ந்து பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது விஜய் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்றபோது இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இளைஞர்கள் சென்ற பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com