தமிழகத்தில் முதல் முறை வாக்காளர்கள் எத்தனை பேர்? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 5.73 கோடி பேரில், சுமார் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
FIle photo (AI)
FIle photo (AI)
Published on

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

*தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில், 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன; 62 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்.

*தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ஆகியுள்ளன.

*தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 5.73 கோடி பேரில், சுமார் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்

* சுமார் 86,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன

* தமிழ்நாட்டில் இதுவரை 1,262 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல்; ரொக்கமாக மட்டும் ரூ.543 கோடி கைப்பற்றப்பட்டது” இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com