

சென்னை,
5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்க ளாக களமிறங்கி ‘இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமர வேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்களாக களம் கண்டு 'விசில்' சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
5 முனை போட்டி உருவாகியிருந்தாலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் கடும் போட்டி நிலவியது. கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய முக் கிய கட்சிகள் விலகி சென்ற நிலையில், தே.மு.தி.க.. மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் இந்த தேர்தல் களத்தை தி.மு.க. சந்தித்தது.
மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஐ.பரந்தாமன் தோல்வியை தழுவினாலும் 54 ஆயிரத்து 8 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார். பொதுத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு 30.18 சதவீதம் கிடைத்திருந்தது. இடைத்தேர்தலில் 29.15 சதவீதம் கிடைத்துள்ளது. 1.03 சதவீதம் மட்டும் வாக்கு சரிந்துள்ளது.
தாராபுரம் தொகுதியை பொறுத்தவரையில் பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்திருந்தார். அவர் பெற் றிருந்த வாக்கு சதவீதம் 32.20 ஆகும். தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 57 ஆயிரத்து 370 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் பெற்றுள்ள வாக்கு சதவீதம் 31.78 ஆகும். பொதுத்தேர்தலை விட 0.42 சதவீத வாக்கு கள் மட்டும் தி.மு.க.வுக்கு குறைந்துள்ளது.
இந்த 2 தொகுதிகளிலும் தபால் ஓட்டில் தி.மு.க. முத்திரை பதித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் பதிவான 864 தபால் வாக்குகளில் 358 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் பதிவான 1,316 தபால் வாக்குகளில் 613 வாக்குகளையும் தி.மு.க. வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். தி.மு.க.வின் கூட்டணி பலம் குறைந்தாலும் வாக்கு சதவீதம் பாதிக்கவில்லை. மதுராந்தகம் தொகுதியில் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது.
இந்தநிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்த இடைத்தேர்தலில் திமுகவை பொறுத்தவரை தோல்வியில் வெற்றி,தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி என்றார்.