மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - தேனியில் கடையடைப்பு போராட்டம்

வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருசநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலை கிராம மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - தேனியில் கடையடைப்பு போராட்டம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களுடன் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக வருசநாடு சுற்றுவட்டார கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com