முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்: முதல்-அமைச்சர் விஜய்

மதச்சார்பற்ற அரசாகத் தான் இந்த அரசு செயல்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்து உரையாற்றினர்.

இறுதியாக முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிச்சயமாக இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகத் தான் செயல்படும் என உறுதி அளிக்கிறேன். முந்தைய அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதி அளிக்கிறேன். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசே, தவிர குதிரை பேரத்தில் ஈடுபடுகிற அரசு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா முதல்-அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டது எதற்கு என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்வதாக (I will rethink about it) தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com