வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... தென்காசி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்ப டுத்தி வருகிறது.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... தென்காசி கலெக்டர் முக்கிய அறிவிப்பு
Published on

தென்காசி,

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் நேரடியாக சென்று தங்களின் கைரேகையை பதிவு செய்த பிறகே பொருட்கள் வாங்கி வருகின்றனர். ஆனால் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்ப டுத்தி வருகிறது.

தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜூன் 2, 3-ந் தேதி களில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு. சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களின் இல்லங்களுக்கே நேரில் வந்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் வினியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com