உலக அளவில் டாட்டா மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் சரிந்தது

உலக அளவில், அக்டோபர் மாதத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.
உலக அளவில் டாட்டா மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் சரிந்தது
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த அக்டோபர் மாதத்தில், சர்வதேச அளவில் (ஜகுவார்- லேண்டு ரோவர் சொகுசு கார்கள் உள்பட) மொத்தம் 89,108 வாகனங்களை விற்பனை செய்துள் ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 19 சதவீத சரிவாகும். அப்போது அது 1,09,597 வாகனங்களாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் டாட்டாவின் பயணிகள் வாகனங்கள் விற்பனை 7 சதவீதம் சரிந்து (65,217-ல் இருந்து) 60,630-ஆக குறைந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை (டாட்டா தேவூ வாகனங்கள் உள்பட) 36 சதவீதம் குறைந்து (44,380-ல் இருந்து) 28,478-ஆக சரிவடைந்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு கணிசமாக குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் பங்கு ரூ.171.50-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.176-க்கும், குறைந்தபட்சமாக ரூ.169.40-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.170.60-ல் நிலைகொண்டது. முந்தைய வர்த்தக தினத்தின் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.81 சதவீதம் குறைவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com