தமிழகத்தில் கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும்: அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி

தமிழகத்தில் கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.
Published on

திருப்புவனம்,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து பேசினார். இந்த முகாமில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி, வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசும்போது, வாரத்தில் நான்கு நாட்கள் திறக்கப்பட்டுள்ள கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும். 62 சதவீதம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வருகிற 20ந்தேதிக்குள் 70 சதவீதம் எட்டப்படும். சுகாதார நிறுவனம் அறிவித்தபடி 70 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டால் 3வது அலையை எளிதில் எதிர்கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்டவர்கள் 10 லட்சத்து 71 ஆயிரத்து 700 பேர். இதில் முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 55 ஆயிரத்து 247 பேர் செலுத்தியுள்ளனர். 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 980 பேர் ஆவர். மாவட்டம் முழுவதும் 700 முகாம்களில் 42 ஆயிரத்து 940 தடுப்பூசி டோஸ்கள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com