இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ருடெங் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 600 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின்போது ருடெங் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக பதிவானபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இந்தோனேசியா நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com