பாகிஸ்தானில் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர் பலி

பாகிஸ்தானில் சோதனை சாவடி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர் பலி
Published on

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் வடக்கே வசீரிஸ்தான் பகுதியில், காரியோம் என்ற இடத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படையினரை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை, ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லை பகுதியில் வடக்கு வசீரிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com