ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு போராட்டம் முதல்-அமைச்சருடன் நாளை சந்திப்பு

கரூரில் 3-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர் கள் கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை கள் தொடர்பாக முதல்-அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) சந்தித்து பேச உள்ளனர்.
Published on

கரூர்,

சரக்கு, சேவை வரியில் கைத்தறி ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட் டிருப்பதை போல விசைத்தறி ஜவுளி தொழிலுக்கும் விலக்கு அளிக்க கோரி ஜவுளி உற்பத்தி யாளர்கள் கடையடைப்பு, வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவுளி தொழிலுடன் இணைந்த உப தொழில்களுக் கான சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற னர்.

கரூர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதியில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர். நேற்று 3-வது நாளாக 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக் கப்பட்டிருந்தன.

ஆயிரத்திற் கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் இயங்கவில்லை. தொழிலாளர்களும் வேலை இல்லாமல் பாதிப்படைந் துள்ளனர்.


ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தினால் போர் வை, மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள், தலையணை உறை, சமையலர்களுக்கான உடைகள், துண்டுகள் போன்ற வீட்டு உபயோக ஜவுளிகள் பல கோடி கணக்கில் தேக்க மடைந்துள்ளன. மேலும் உற்பத்தியும் பாதிப்பு அடைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கும் ஜவுளிகள் அனுப்பப்படவில்லை.

கடந்த 3 நாட்களில் ரூ.20 கோடி உற்பத்தி பாதிப் படைந்துள்ளதாக நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்களும் உற்பத்தி யாளர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் கடை யடைப்பு, வேலை நிறுத்தம் போராட்டத் தில் ஈடுபட்ட னர். ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் பிற சங்கத்தினர் நேற்று வழக்கம் போல பணிகளை தொடர்ந்தனர்.


ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை தொடர்பாக சென் னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு நாளை (திங்கட்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரிடம் நாளை சந்தித்து கோரிக்கையை எடுத்துரைத்து சரக்கு, சேவை வரி குழுவுக்கு தெரியப்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்த உள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் அகில இந்திய அளவிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com