மைசூரு,
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மண்டியா மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர அளித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள செலுவாம்பா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து குழந்தைக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். முதல்கட்ட சோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம்...
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தோம். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த குழந்தை 2 கிலோ 700 கிராம் எடை உள்ளது. ஆரோக்கியமாக உள்ளது. அந்த பெண்ணும் ஆரோக்கியமாக உள்ளார். தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.