கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சரிவர செயல்படவில்லை கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சரிவர செயல்படவில்லை என கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சரிவர செயல்படவில்லை என கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆரோக்கிய சேது செயலி

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். சில கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்த செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதாரமாக இருப்பது மற்றும் பொது நலம் காப்பது இவைகளில் இன்னும் சரியாக கவனம் செலுத்தவில்லை.

தமிழ்நாடு இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கிராமங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்பெற செய்வது அவசியம். ஆகையால் நீங்கள் கிராமத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஆணையர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

செயல்பாடுகள் சரியில்லை

சில கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஆணையர்கள் அவரவர்களின் கடமையை சரியாக செய்யவில்லை. அவர் களின் வேலையை மேம்படுத்த வேண்டும். இதை உங்களுக்கு எத்தனை முறை சொல்லவேண்டியுள்ளது. மக்களின் நலன் பொருட்டு உங்கள் பொறுப்புகளை உணர்ந்து உடனடியாக செயல்படுங்கள்.

புதுச்சேரி, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் மற்றும் பாகூர் ஆகியவைகளின் செயல்பாடுகள் சரியில்லை. காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் அனைத்து செயல்பாடுகளும் சரியில்லை. மாகி இன்னும் சற்று அதிகம் செயல்பட வேண்டும். ஏனாம் பூஜ்ஜியம். நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்புகளை சரிவர உணரவில்லை. பொறுப்பை உணர்ந்து நன்றாக செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com