மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடந்தது

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வழியாக நடந்தது.
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை காணொலி காட்சி வழியாக நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

* தி.மு.க.வின் கட்டளையை நிறைவேற்றும் உடன் பிறப்பாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றும் பொதுநலவாதியாக சளைக்காமல் பணியாற்றி இன்னுயிர் ஈந்த ஜெ.அன்பழகனுக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன், அவரது குடும்பத்திற்கு தி.மு.க. என்றும் துணைநிற்கும் என்ற உறுதியுடன், ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இரங்கல் தீர்மானங்கள்

* தமிழ் உணர்வும், திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

* நாகை மாவட்டத்தில் தி.மு.க.வை வளரச் செய்த முன்னோடி நிர்வாகியும், ஒன்றுபட்ட நாகை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவருமான அ.அம்பலவாணன் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

* இனமான பேராசிரியர் என அழைக்கப்படும் க.அன்பழகனை இழந்த துயரமே இன்னும் இதயத்தை விட்டு நீங்காத நிலையில், அவரது மகள் மணமல்லி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரது மறைவுக்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

மேற்கண்டவாறு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com