வருமானவரி சோதனையால் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு பெருகும் தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி

வருமானவரி சோதனையால் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு பெருகும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.
வருமானவரி சோதனையால் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு பெருகும் தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி
Published on

கும்பகோணம்,

மோடிக்கும், தமிழக அரசுக்கும் எதிரான அலை வீசுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் பா.ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எந்த கட்சியையும் சேராத கல்வியாளர்கள், துணை வேந்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் மோடிக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் கல்வித்துறை நாசமாகிவிடும் என்று கூறி உள்ளனர்.

இந்த தேர்தலில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதன் காரணமாக மோடி வழக்கம்போல சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் சோதனை நடத்தி வருகிறார்.

இதுபோன்ற வருமானவரி சோதனையால் ஆளுங்கட்சியான பா.ஜனதாவுக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்க்கட்சிகளுக்கு அனுதாபமும், ஆதரவும் பெருகும்.

இந்த தேர்தலில் ஒருவேளை மோடிக்கு மக்கள் ஓட்டு போட்டால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது. கூட்டாட்சி தத்துவம் காணாமல் போய்விடும். ஜனநாயகம் இருக்காது.

ஒரு கொடுமையான ஆட்சி முறை வந்து விடும். ஹிட்லர் எப்படி நாடகமாடி ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்து பின்னர் சர்வாதிகார ஆட்சி செய்து கொடுமைகள் செய்தாரோ, அதேபோல் மோடியின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியை போல் கொடுமையாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com