நாடாளுமன்றத்துக்குள் தோட்டாக்களுடன் நுழைய முயன்றவர் சிக்கினார்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் நேற்று நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 8-வது எண் நுழைவு வாயில் வழியாக வந்த ஒருவரை அவர்கள் சோதனையிட்டனர். அப்போது அவரது பணப்பையில் வெடிக்காத 3 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அவரை பிடித்து உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த அக்தர் என தெரியவந்தது. மேலும் உரிமம் பெற்று அவர் வைத்திருக்கும் துப்பாக்கியின் தோட்டாக்களை தவறுதலாக அந்த பையில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com