அடுத்த 3 மாதங்கள் ஏழைகளுக்கு இலவச உணவு பொருட்கள் - மத்திய அரசுக்கு மந்திரி சகன்புஜ்பால் வலியுறுத்தல்

அடுத்த 3 மாதங்கள் ஏழைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை மந்திரி சகன்புஜ்பால் வலியுறுத்தினார்.
Published on

மும்பை,

மராட்டிய உணவு, பொதுவினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மந்திரி சகன் புஜ்பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கிறது. ஏழைகள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ரேஷனில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.

அடுத்த 3 மாதங்களுக்கு..

இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஆரம்பித்து இருந்தாலும் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்னும் சிறிது காலம் ஆகும். எனவே செப்டம்பர் வரை அடுத்த 3 மாதங்களுக்கு ஏழைகளுக்கு இலவசமாக ரேஷனில் உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானிடம் வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com