செங்கல்பட்டு,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் இலக்காகி உள்ளன. இவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,308 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,919 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,113 ஆகவும் உள்ளது.