சிவகங்கை,
2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை அடுத்து அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் வருகிற 18ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. வாக்கு எண்ணிக்கை 23ந்தேதி நடைபெறும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யான இல. கணேசன் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பெருந்தாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாடினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி ஸ்தானம் கூட கிடைக்காது என்றும் கூறினார்.