அதிரடி திருப்பங்களுடன் உண்மை சம்பவம் படமாகிறது

‘காத்தவராயன்’, ‘இ.பி.கோ 302’ ஆகிய படங்களை இயக்கிய சலங்கை துரை, ‘கடத்தல்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
Published on

காத்தவராயன், இ.பி.கோ 302 ஆகிய படங்களை இயக்கிய சலங்கை துரை, கடத்தல் என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஒரு முக்கியமான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட, அதிரடி திருப்பங்களுடன் கூடிய படமாக கடத்தல் தயாராகி வருகிறது. எப்போது நடந்த கடத்தல், யார் நடத்திய கடத்தல், எங்கே நடந்த கடத்தல்? என்ற பரபரப்பான திரைக்கதையை கொண்ட படம், இது.

இதில் எம்.ஆர்.தாமோதர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகிய இருவரும் நடிக் கிறார்கள். நிழல்கள் ரவி, சிங்கம்புலி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com